பீஜிங் ;இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களை அந்நாட்டு
அதிபர் ஷீ ஜிங்பிங் சந்தித்துப் பேசினார்.
கடந்த 2020 ஜூனில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் ஆக்ரமிப்பு முயற்சியை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர்.
அதன் பின் நடந்த பல கட்ட பேச்சில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும் சில பகுதிகளில் இன்னும் சீன ராணுவம் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியா – சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே இன்று 16ம் கட்ட பேச்சு நடக்க உள்ளது.
இந்நிலையில் லடாக் எல்லையோரம் ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு மூன்று நாள் பயணமாக ஜிங்பிங் வந்தார். ஜின்ஜியாங் ராணுவ பிரிவுதான் லடாக் எல்லை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.இப்பிரிவின் ராணுவ உயர் அதிகாரிகள் வீரர்கள் ஆகியோரை சந்தித்த ஜிங்பிங் அவர்களிடம் எல்லையை சிறப்பாக பாதுகாப்பதாக பாராட்டினார்.
இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினருடன் நடந்த மோதலில் படுகாயம் அடைந்த சீன ராணுவ கமாண்டர் குய் பபோவுக்கு ‘எல்லையை பாதுகாத்த ராணுவ கமாண்டர்’ என்ற கவுரவ விருதை அவர் வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement