குரோம்பேட்டையில் குடிபோதையில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை ஒன்றரை மணி நேரம் போராடி மீட்டனர்.
சென்னை குரோம்பேட்டை துர்கா நகர், பச்சை மலை பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (எ) மாரி (20), இவர், அதே பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார் ஒலி பெருக்கி மூலம் கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர் கீழே இறங்காமல் இருந்தார். இதையடுத்து அங்கு வந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பேரராடி மீட்டனர்.
கீழே இறங்கி வந்தபோது தீயணைப்புத் துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு குதித்து தப்பியோடினார் அவரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் விஜய், கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பதும் ஏரியாவில் போக்கிரி தனமாய் சுற்றித் திரிந்து பெவிக்குவிக், தின்னர் போன்ற பொருட்களை வைத்து போதை ஏற்றிக் கொண்டு இருந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வீட்டை விற்று பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 மணி நேரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதே மின் கோபுரத்தில் ஏறி நேற்று காலை கிஷோர் என்பவர் காதல் விவகாரத்தில் திருமணம் செய்து வைக்கக் கோரி தற்கொலை மிரட்டல் விடுத்து சிறை சென்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM