பூமிக்கு அப்பாற்பட்ட உயிரினங்கள் நமக்குத் தெரியாது. இன்னும் உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. வேற்று கிரகவாசிகள் என்னும் ஏலியன்கள் (அவை இருந்தால்) தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது என்ற அனுமானங்களும் நம்ப்பிக்கைகளும் அதிக அளவில் உள்ளன. விஞ்ஞான அடிப்படையிலான தேடல்களும் அவை கொடுக்கும் நம்பிக்கைகளும் ஏலியன்கள் தொடர்பான ஆர்வத்தை அதிகரித்து வருகின்றன. இருந்தாலும், இன்னும் அறுதியான இறுதி முடிவுகளை ஏலியன்கள் ஆராய்ச்சி இதுவரை கொடுக்கவில்லை. தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தனது பணியை தொடங்கிய நிலையில், அந்த அற்புத தொலைநோக்கி வேற்று கிரகங்களையும், அந்த கிரகங்களில் வசிக்கும் உயிரினங்களை பற்றி தரும் தகவல்கள் ஏலியன்கள் இருப்பு பற்றிய கேள்விகளுக்கு விடை கொடுக்கலாம்.
எது எப்படியிருந்தாலும், உண்மையில் ஒரு வேற்றுகிரக நாகரிகம் உள்ளது என்று கற்பனை செய்வது புதிரானது மட்டுமல்ல ஆர்வத்தை தூண்டும் த்ரில்லான அனுபவம். ஏலியன்கள் மனிதர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வெற்றிபெறவில்லை. குறைந்தபட்சம் இப்போது வரை என்று நம்புவது சுவாரசியமானது.
பிரபஞ்சத்தில் ஏலியன்களின் இருப்பு தொடர்பான உறுதியற்ற பல விஷயங்கள் உலா வந்தாலும் தற்போது பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் மண்டலத்தில் இருந்து ரேடியோ சிக்னல்கள் வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகள் இருப்பை உறுதி செய்கிறதா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
இந்த ரேடியோ சிக்னல் போன்ற ‘இதயத் துடிப்பு’ அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களால் பெறப்பட்டுள்ளது. தொலைதூர விண்மீன் மண்டலத்தில் இருந்து வரும் இந்த ரேடியோ சிக்னல், வியக்கத்தக்க ஒழுங்குடன் ஒளிர்கிறது என்பது வேற்று கிரகவாசிகள் தொடர்பான விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக இருக்கலாம்.
தற்போது கிடைத்திருக்கும் சமிக்ஞைகள் ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட்ஸ் அல்லது FRB என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக, FRB பல மில்லி விநாடிகளுக்கு மட்டுமே இருக்கும். ஆனால் இந்த FRB, வழக்கமானவற்றை விட 1000 மடங்கு அதிக நேரம் நீடித்தது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு 0.2 வினாடிக்கும் ஒரு சிக்னல் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இதயத் துடிப்பைப் போன்ற சிக்னல்கள் பிரபஞ்சத்தில் இருந்து கிடைத்துள்ளது.
தற்போது கிடைத்திருக்கும் FRBஐ, FRB 20191221A என விஞ்ஞானிகள் அடையாளப்படுத்தியுள்ளனர். இது இன்றுவரை கிடைத்த FRBகளில் மிகவும் நீண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | GALEX தொலைநோக்கி வெளிப்படுத்தும் பிரபஞ்ச ரகசியம்
ரேடியோ சிக்னல்கள் பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் மண்டலத்தில் இருந்து வருகின்றன. ரேடியோ சிக்னல்கள் எங்கிருந்து வந்தன என்பது தொடர்பான எந்தவிதமான ஆதாரங்களு கிடைக்கவில்லை, ஆனால் ரேடியோ பல்சர் அல்லது காந்தம் இந்த சமிக்ஞையை வெளியிடுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
“கண்டிப்பாக குறிப்பிட்ட கால இடைவெளியில் சமிக்ஞைகளை வெளியிடும் பல விஷயங்கள் பிரபஞ்சத்தில் இல்லை” என்று MIT இன் காவ்லி இன்ஸ்டிடியூட் ஃபார் அஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் ரிசர்ச்சின் போஸ்ட்டாக் டேனியல் மிச்சில்லி கூறுகிறார்.
“நமது சொந்த விண்மீன் மண்டலத்தில் நமக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுகள் ரேடியோ பல்சர்கள் மற்றும் காந்தங்கள், அவை சுழலும் மற்றும் கலங்கரை விளக்கத்தைப் போன்ற ஒரு ஒளிக்கற்றை உமிழ்வை உருவாக்குகின்றன. இந்த புதிய சமிக்ஞையானது ஸ்டெராய்டுகளில் ஒரு காந்தம் அல்லது பல்சராக இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 40 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை வகைப்படுத்திய நாசா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ