Today Gold and silver rate: 11 மாதங்களில் இல்லாத வகையில் தங்கம் விலை குறைவு!

மஞ்சள் உலோகமான தங்கம் விலை கடந்த 11 மாதங்களில் இல்லாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. சென்னையை பொருத்தவரை 24 காரட் தூயத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,029ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,232ஆக உள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ.4,627 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.37,016 ஆக விற்பனை ஆகிவருகிறது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், தங்கம் கிராமுக்கு ரூ.9 குறைந்துள்ளது. வெள்ளியை பொருத்தமட்டில் ஒரு கிராம் ரூ.60.70 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.60 ஆயிரத்து 700 ஆக உள்ளது.
பெட்ரோல்-ஐ பொருத்தவரை லிட்டருக்கு ரூ.102.63 என நேற்றைய விலையை தொடர்கிறது. 11 மாதங்களில் இல்லாத வகையில் தங்கம் விலை குறைந்துள்ளதற்கு சந்தையில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும் அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம் முதன்மையானதாக பார்க்கப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் போக்குவரத்து செலவினங்கள் காரணமாக தங்கத்தின் விலை பகுதிக்கு பகுதிக்கு மாறுபடும்.
இதற்கிடையில்,கமாடிட்டி மார்க்கெட் நிபுணர்களின் கூற்றுப்படி, அமெரிக்க பணவீக்கம் 41 ஆண்டுகால உயர்வை எட்டிய பிறகு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த ஊகங்கள் அதிகமாக இருப்பதால் தங்கம் விலை அழுத்தத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.