கேரளத்திலுள்ள பட்டியாலாவை சேர்ந்த தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர். இவர் நீளம் தாண்டுதல் பிரிவில் தேசியளவில் பல பதக்கங்களைக் குவித்திருக்கிறார். அந்த வகையில் கடந்த மே மாதம் கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் உள்ள கலிதியா நகரில் சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்ற பொழுது, முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
அப்பொழுது ஸ்வீடனின் தோபியாஸ் மான்ட்லர் 8.27 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸின் ஜூல்ஸ் பொம்மெரி 8.17 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்பொழுது உலக தடகள சாம்பியன்ஷிப், நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற முரளி ஸ்ரீசங்கர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். உலக சாம்பியன்ஷிப் ஆடவர் நீளம் தாண்டுதலின் இறுதிப் போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் மற்றும் அவினாஷ் சேபிள் கலந்துகொண்டுள்ளனர்.
அதில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் மற்றும் ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (steeplechase) பதக்கப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றனர். இந்த சீசனில் இதுவரை சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரீசங்கர், 8 மீ தூரம் பாய்ந்து தனது சக ஆட்டக்காரர்களான ஜெஸ்வின் ஆல்ட்ரின் (7.79 மீ) மற்றும் முஹம்மது அனீஸ் யாஹியா (7.73 மீ) ஆகியோரை முந்தி நேரடியாக போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதற்கிடையில், இந்தியாவின் ராணுவ வீரர் அவினாஷ் சேபிள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் 8:18.75 நேரத்துடன் நேரடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்து பதக்கச் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.