Xiaomi India President Muralikrishnan: சியோமி இந்தியா புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவின் புதிய தலைவராக முரளிகிருஷணன் செயல்படுவார் என நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவர் ஆகஸ்ட் 1, 2022 அன்று பொறுப்பேற்கிறார்.
புதிய தலைவராக பொறுப்பேற்கும் பி.முரளிகிருஷ்ணன் பல ஆண்டுகளாக Xiaomi இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். முன்னதாக, அவர் 2018 முதல் சியோமி இந்தியாவின் தலைமை இயக்க அலுவலராக பணியாற்றினார்.
Oppo Reno 8: ஜூலை 18 ஒப்போ ரெனோ 8 சீரிஸ் அறிமுகம்? விலை, அம்சங்கள் என்ன?
சியோமி இந்தியாவின் தலைவராகும், முரளிகிருஷ்ணன் நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகள், சேவைகளை கவனித்துக் கொள்வார். பொது விவகாரங்கள், திட்டங்கள் ஆகியவற்றிலும் அவரின் செயல்பாடுகள் இருக்கும். இந்த தகவலை சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
சியோமி இந்தியாவின் புதிய தலைவர்
ஐந்தாண்டுகளாக COO பதவி வகித்து வந்த முரளிகிருஷ்ணன் தற்போது சியோமி இந்தியாவின் தலைவர் பொறுப்பை அலங்கரிக்க உள்ளார். அவரின் சீரிய பணியைக் கண்டு நிறுவனம் அவருக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்க்கிறது.
Lockdown Mode: பூட்டை உடைத்தால் ரூ.16 கோடியாம்; ஆப்பிள் அறிவித்த அல்டிமேட் ஆஃபர்!
இந்நிறுவனத்தில் பணிபுரிவதற்கு முன்பு, eBay India என்ற இ-காமர்ஸ் இணையதளத்தின் தலைவராக இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, அவர் iBank இந்தியாவில் சிஓஓவாக பணியாற்றியுள்ளார். ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான Myntra-விலும் சில காலம் இவர் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துவந்தார்.
Canon Selphy பிரிண்டர் உங்கள் நினைவுகளின் நாயகன் என்று சொன்னால் நம்புவீர்களா?
முரளிகிருஷ்ணன் Xiaomi இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயினுடன் இணைந்து பணியாற்றுவார். கடந்த ஆண்டு, நிறுவனம் மனு குமார் ஜெயினை Xiaomi நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமித்தது.
iPhone 13 Offers: ஐபோன் 13 மினி இப்போது அதிரடி தள்ளுபடி விலையில்; ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!
சியோமி இந்தியாவின் தலைவர் பதவியை வகிக்கும் முரளிகிருஷ்ணன், கடந்த 25 ஆண்டுகளாக நுகர்வோர் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருகிறார். இவர் IIM-கொல்கத்தா முன்னாள் மாணவர் ஆவார்.
Nothing Phone Issue: நத்திங் போனில் இப்படி ஒரு சிக்கலா? பரிதவிக்கும் வாடிக்கையாளர்!
நிறுவன வளர்ச்சி, ஆஃப்லைன் விற்பனை, சேவை மற்றும் நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளுக்கு அவர் முன்பு பொறுப்பேற்று, நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார் என்ற நற்பெயர் கொண்டிருக்கிறார்.