மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் உடல் தகனம் எந்த மத சடங்குகளையும் பின்பற்றாமல் நடந்தது.
நடிகர், இயக்குனர் பிரதாப் போத்தன் கடந்த 15ஆம் திகதி காலமானார். அவரது மறைவு திரையுலகினர் பலரை கண்ணீர் சிந்த வைத்தது.
சென்னை வேலங்காடு மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக எந்தவித மத சடங்குகளும் பின்பற்றப்படவில்லை.
இறப்பதற்கு முன்பு அவர் கேட்டுக்கொண்டதின் பேரில் இவ்வாறு அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாக, பிரதாப் போத்தனின் உறவினர் அனில் தாமஸ் தெரிவித்துள்ளார்.
வித்தியசமான படங்களை கொடுத்த பிரதாப் போத்தனின் உடல் தகனமும், எந்தவித மத சடங்குகளையும் பின்பற்றாமல் நடந்தது சோகத்தில் இருந்த அனைவரையும் வியந்து பார்க்க வைத்தது.