அரியலூர்: அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (ஜூலை 17) தமிழ்நாடு இயக்கை வேளாண்மை இயக்கம் சார்பில் விதைத்திருவிழா காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இங்கு மரபுவகை நெல்கள், கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, குதிரைவாலி, தினை, சாமை, நாட்டுக்காய்கறிகளின் விதைகள், கீரை விதைகள், இயற்கை உணவு, பசுமை நூல்கள் மற்றும் துணிப்பைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், இயற்கை வலி நிவாரணிகள், மரப்பாச்சி பொம்மைகள், வரகு, ராகி, கம்பு உள்ளிட்டவற்றின் திண்பன்டங்கள், பலா ஐஸ்கிரீம், கரும்புச் சாறு, கூல் உள்ளிட்ட இயற்கையான உணவு பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், இயற்கை வேளாண் வல்லுநர்கள், வேளாண்துறை வல்லுநர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை முன்னோடி விவசாயிகள் கருத்துரை மற்றும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.