![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/07/1658064538_NTLRG_20220717105421546585.jpg)
குறும்பட இயக்குனரின் படத்தில் ஊர்வசி – பார்வதி
மலையாளத்தில் விர்ஜின் மற்றும் ஸ்வீட் ஹார்ட் என இரண்டு குறும்படங்களை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் கிரிஸ்டோ டோமி. ஒரு போட்டியில் இவர் எழுதிய உள்ளொழுக்கம் என்கிற ஸ்கிரிப்ட் அந்த போட்டியின் நடுவர்களாக கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஆமிர்கான் மற்றும் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ஆகியோரால் பாராட்டப்பட்டு முதல் பரிசையும் தட்டிச்சென்றது. தற்போது அந்த கதையை 'உள்ளொழுக்கு' என்கிற பெயரில் படமாக இயக்கி உள்ளார் கிரிஸ்டோ டோமி.
இந்த படத்தில் நடிப்புக்கு சவால் விடும் இரண்டு நடிகைகளான ஊர்வசியும், பார்வதியும் இணைந்து நடித்துள்ளனர். இந்த கதையை கேட்டதுமே பார்வதி உடனே நடிப்பதற்கு சம்மதித்து விட்டாராம். இந்தநிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான உத்தம வில்லன் படத்தில் ஊர்வசியும், பார்வதியும் நடித்திருந்தாலும் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.