பெங்களூரு : பெங்களூரின் சுதந்திர பூங்கா அருகில், புதிதாக கட்டப்பட்ட வாகன பார்க்கிங்கை, கமிஷன் அடிப்படையில் நிர்வகிக்க, டெண்டர் கோர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.பெங்களூரின், சுதந்திர பூங்கா அருகில் மாநகராட்சி சார்பில், 79 கோடி ரூபாய் செலவில், பலமாடி கட்டடம் கட்டி வருகிறது. கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளது.
இதன் மூலம், ஆண்டுதோறும் 4 முதல் 4.50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்குமென, மாநகராட்சி எதிர்பார்க்கிறது.இதை நிர்வகிக்க டெண்டர் கோரியது. ஆனால் பலமுறை டெண்டர் அழைத்தும், ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கவில்லை. எனவே கமிஷன் பெற்று, பார்க்கிங்கை நிர்வகிக்க டெண்டர் கோர, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கமிஷன் அடிப்படையிலான டெண்டர் என்றால், வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்கும் பார்க்கிங் கட்டணத்தில், நிர்ணயித்த தொகை ஒப்பந்த நிறுவனத்துக்கு, கமிஷனாக மாநகராட்சி அளிக்கும். குறைந்த தொகை குறிப்பிட்டவர்களுக்கு, டெண்டர் கிடைக்கும்.டெண்டரில் பலமாடி பார்க்கிங் கட்டடத்துடன், இரண்டு சாலைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஹனுமந்தப்பா சதுக்கத்திலிருந்து அரண்மனை சாலை வரை, கே.ஜி.சாலையிலிருந்து, சேஷாத்ரி சாலை பகுதிகளில், சட்டவிரோத பார்க்கிங்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு சாலைகளிலும், நிர்ணயித்த இடத்தில் மட்டுமே, கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement