சென்னை விமான நிலையத்தில் 1.37 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், மின்னணு பொருட்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி துபையில் இருந்து சென்னை வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணி என்பவரிடம் விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, அவரின் உடலை முழு சோதனை செய்ததில், ஆசன வாயில் மறைத்து 1.25 கிலோ எடை கொண்ட தங்கப்பசையை எடுத்துவந்து கண்டுபிடிக்கப்பட்டது.
55.38 லட்சம் ருபாய் மதிப்புள்ள அந்த தங்க பசையை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், துபையில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த தமீம் அப்துல் ரஹ்மான், திருச்சியைச் சேர்ந்த முகமது ஹபீபுல்லா ஆகிய 2 பயணிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அவர்களும் ஆசன வாயில் மறைத்து வைத்து 1.425 கிலோ தங்கப்பசை, தங்கச் சங்கிலிகள் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்து எடுத்து வந்த மின்னணு பொருட்கள், குங்குமப்பூ, சிகரெட்டுகள் ஆகிவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தின் மதிப்பு 62.81 லட்சம் ரூபாய் என்றும், மற்ற பொருட்களின் மதிப்பு ரூ.18.97 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.