நீங்கள் கிரிக்கெட்டில் செய்ததை மற்றவர்கள் கனவில் மட்டுமே காணமுடியும் – கோலிக்கு ஆதரவளித்த பீட்டர்சன்

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சமீபகாலமாக போட்டிகளில் சரிவர விளையாடுவதில்லை என்று விமர்சனங்கள் எழுத்து வருகிறது. கோலி கடைசியாக நவம்பர் 2109-ல் தான் சதம் அடித்துள்ளார். அதன் பின்னர் அவர் சதம் அடிக்கவில்லை..

இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விராட் கோலி சரிவர விளையாடதால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், விராட் கோலிக்கு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சென்றுகொண்டே இருங்கள் பெரிய மனிதரே. கிரிக்கெட்டில் நீங்கள் செய்தவற்றை மற்ற மக்கள் கனவில் மட்டும் தான் காணமுடியும்’ என்றார்.

அதேபோல், பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நண்பரே, நீங்கள் ஆடிய ஆட்டத்தை மற்றவர்களால் நினைத்துப்பார்க்க மட்டுமே முடியும். பெருமிதம் கொள்ளுங்கள், உயரமாக நடந்து வாழ்க்கையை மகிழுங்கள். கிரிக்கெட்டின் குமிழியை விட பெரிது நிறைய உள்ளது. நீங்கள் மீண்டு வருவீர்கள் விராட் கோலி’ என தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.