மீண்டும் மிரட்ட வரும் சூர்யா.. ’24’ படத்தின் இரண்டாம் பாகம் !!

சூர்யாவின் ’24’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ’24’. கடந்த 2016ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில் மூன்று வேடங்களில் சூர்யா அசத்தியிருந்தார். படத்தில் நாயகியாக சமந்தா நடித்திருந்தார். இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்திருந்தார்.

surya

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது. டைம் டிராவல் முறையில் உருவான இந்தப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தும் தரப்பினரையும் கவர்ந்தது. இந்தப் படத்தில் ஆத்ரேயா என்ற எதிர்மறை வேடத்தில் நடிகர் சூர்யா மிரட்டியிருப்பார்.

surya

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சூர்யா ரசிகர்கள் இப்பொழுதே சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

 
newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.