போபால்,
மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம் நன்பூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாம்ரத் மவுரியா (வயது 35). இவருக்கு நானி பாய் (வயது 30), மேலா (வயது 28), சக்ரி (வயது 25) என 3 மனைவிகள் உள்ளனர்.
நானி பாயை 2003-ம் ஆண்டும், மேலாவை 2008-ம் ஆண்டும், சக்ரியை 2017-ம் ஆண்டும் சாம்ரத் மவுரியா திருமணம் செய்துகொண்டார். இந்த 3 பேரையும் ஒரேநேரத்தில் கடந்த மே மாதம் சாம்ரத் திருமணம் செய்துகொண்டார். மவுரியாவுக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளன.
இதனிடையே, மவுரியா தனது மனைவிகளை நன்பூர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார். நானி பாய் , சக்ரி ஆகிய 2 மனைவிகளையும் மவுரியா தேர்தலில் நிறுத்தியுள்ளார். 3-வது மனைவியான நானி பாயை அவர் தேர்தலில் நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால், நானி கல்வித்துறையில் வேலை செய்துவருவதால் தேர்தலில் போட்டியிட்டால் அந்த வேலையை இழக்க நேரிடும் என்பதால் அவர் போட்டியிடவில்லை.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் போட்டியிட்ட மேலா, சக்ரி ஆகிய 2 பேரும் வெற்றிபெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்க தனது மனைவிகளுடன் மவுரியா நேற்று கிராமம் முழுவதும் சுற்றி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் 2 மனைவிகள் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.