ஜி-7 நாடுகளின் ஒன்றியம் இலங்கைக்கு 14 மில்லியன் டொலர் உதவி
வழங்கியிருப்பதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பிரச்சினையை தீர்ப்பதற்கே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு
தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இணையவழி ஊடாக கலந்து கொண்டு
உரையாற்றும் பொழுதே பதில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பணவீக்கம்
அதிகரித்தனால் உணவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை
தீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மூன்றாம்
உலக நாடுகள் வரிசைக்குள் செல்வதை தவிர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்படும் என்று பதில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.