ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின்பு உலக நாடுகளின் ஆதிக்கம் அளவீட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது, குறிப்பாகச் சீனா-வின் ஆதிக்கம் மற்றும் நிலைப்பாட்டில் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் FBI மற்றும் பிரிட்டன் MI5 ஒன்றாக இணைந்து முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது மட்டும் அல்லாமல் இணைந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளது. சீனாவின் நிலை என்ன..?
சீனா-வால் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு என்ன பிரச்சனை..?
ரூ.1.68 லட்சம் கோடி காலி.. பெரும் இழப்பினை கண்ட முதலீட்டாளர்கள்.. என்ன தான் நடக்குது?
MI5 டைரக்டர்
MI5 டைரக்டர் ஜெனரல் கென் மெக்கலம் பேசுகையில், சீனா சம்பந்தப்பட்ட விசாரணைகளின் எண்ணிக்கை 2018 உடன் ஒப்பிடும்போது ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. சீனாவிடம் செயல்பாடுகள் அதிகப்படியான சாவல்களை அளிக்கிறது. இதேபோல், அறிவுசார் சொத்து திருட்டு மற்றும் முக்கிய மேற்கத்தியத் தேர்தல்களில் செல்வாக்குகள் தற்போது முக்கியப் பிரச்சனையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
திடீரெனச் சீனா பக்கம்
இந்தப் பிரச்சனைகள் எல்லாம் 1990 களில் இருந்து இருப்பது தான், ஆனால் திடீரென இப்போது அமெரிக்காவின் FBI மற்றும் பிரிட்டன் MI5 முக்கியத்துவம் கொடுப்பது எதற்காக என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர்
ரஷ்யா – உக்ரைன் போரில் உலக நாடுகளில் என்னவெல்லாம் மாற்றம் நடந்ததோ, அதே மாற்றம் தான் சீனாவுக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா இடத்தில் சீனா வைக்கப்பட்டால் எந்த மாற்றமும் இருக்காது. இதனால் ஏற்கனவே செய்த தவறுகளை அமெரிக்கா, பிரிட்டன் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
சீனா – தைவான்
சீனா தற்போது தைவான் நாட்டைக் கைப்பற்றுவதற்காக அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இப்படிச் செய்தால் ரஷ்யா எதிர்கொண்ட அதே தடைகளைத் தான் சீனாவும் எதிர்கொள்ளும். இதனால் சீனா இதற்காக முன்கூடியே தயாராகி விட்டு போர்டு தொடுக்க வாய்ப்புகள் உள்ளது.
மேற்கத்திய நாடுகள்
இதேபோல் சீனாவுக்குத் தற்போது மேற்கத்திய நாடுகள் எப்படி ராணுவ, பொருளாதாரம், அரசியல் வழியில் தாக்கம் என்பதை ரஷ்யா மீதான நடவடிக்கையில் பெரிய படிப்பினையைக் கொண்டு உள்ளது. இதனால் சீனா-வின் வேகமான திட்டமிடல், உற்பத்தி மற்றும் பணப் பலம் மூலம் எளிதாக வென்றிட முடியும்.
ரஷ்யா – சீனா டீம்
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்பு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரையில் காத்திருந்த ரஷ்யா, போர் தொடுத்தால் அனைத்து தேவைகளையும் சீனா பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்த பின்னரே தாக்கல் நடத்தியது.
அமெரிக்க, பிரிட்டன்
உதாரணமாக ஜெர்மனி எப்படி எரிபொருள், எரிவாயு-வுக்கு அதிகப்படியாக ரஷ்யா-வை நம்பியிருக்கிறதோ, அதேவகையில் அமெரிக்கா, பிரிட்டன் சீனாவை மிகப்பெரிய அளவில் பல்வேறு உற்பத்தி பொருட்களுக்கு நம்பியுள்ளது. சீனா மீது தடை விதிப்பதால் சீனாவுக்கு மட்டும் அல்லாமல் தனக்கும் ஆபத்து என்பது தான் தற்போது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் புலம்பல்.
Biggest winner of Russia – Ukraine War will be China, not Russia or USA or UK or Europe
Biggest winner of Russia – Ukraine War will be China, not Russia or USA or UK or Europe விஸ்வரூபம் எடுக்கும் சீனா.. பீதியில் MI5, FBI.. ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின் நடந்தது என்ன..?