கடும் வெயிலில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சோமேட்டோ டெலிவரி மேனுக்கு, ஸ்விக்கி ஊழியர் உதவி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ ஆகியவை ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் போட்டி நிறுவனங்கள் ஆகும். இச்சூழலில், ‘நிறுவனங்கள் தான் போட்டியாளர்கள்; பணியாளர்களாகிய நாங்கள் எப்போதும் நண்பர்களே’ என்பதை உரைக்கும் விதமாக இந்த இரு நிறுவனங்களை சேர்ந்த டெலிவரி ஊழியர்கள் இருவர் செய்த காரியம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ ஒன்றில், ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் தனது உணவு டெலிவரியினை தனது பைக்கில் டெலிவரி செய்ய செல்வதும், சோமேட்டோ டெலிவரி மேன் தனது சைக்கிளில் டெலிவரி செய்ய செல்வதையும் பார்க்க முடிகிறது. ஸ்விக்கி டெலிவரி மேன், சோமேட்டோ டெலிவரி பேக்கினை வைத்திருப்பவரை தனது கையில் பிடித்துக் கொண்டு கூட்டி செல்வதை பார்க்க முடிகிறது.
டெல்லியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை பார்த்தவர்கள், நிறுவனங்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும், இவ்விருவரும் மனித நேயத்தால் ஒன்றுபட்டுள்ளனர் என்று பலரும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: வாவ்.. இப்படியொரு அழகான கவர்ச்சியான படிக்கட்டுகளா? – புகழ்ந்து தள்ளிய ஆனந்த் மஹிந்திரா!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM