சர்வதேச விமான நிறுவனங்களின் மூன்று விமானங்கள் கடந்த 48 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டன.
இந்திய விமான நிறுவனங்கள் கடந்த 50 நாட்களில் பல முறை தொழில்நுட்பம் மற்றும் விமானக் கோளாறு காரணமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில்
இன்று சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 3 விமான நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப அவசரம் காரணமாகத் தரையிறக்கப்பட்டு மோசமான நாளாக அமைந்தது.
விஸ்வரூபம் எடுக்கும் சீனா.. பீதியில் MI5, FBI.. ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின் நடந்தது என்ன..?
டிஜிசிஏ
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கோழிக்கோடு, சென்னை மற்றும் கொல்கத்தாவில் இந்தத் தரையிறக்கல்கள் மேற்கொள்ளப்பட்டதாகச் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்து அவசர தரையிறக்கல்களும் பல வகைத் தொழில்நுட்ப சிக்கல்களால் நிகழ்ந்தன.
ஏர் அரேபியா
ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவில் இருந்து கொச்சிக்கு ஜி9-426 விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த போது ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டது. விமானம் ஓடுபாதையில் பத்திரமாகத் தரையிறங்கியது. விமானம் பாதுகாப்பாக இழுத்துச் செல்லப்பட்டது.
எத்தியோப்பின் விமான நிறுவனம்
இதேபோல் மற்றொரு சம்பவத்தில், ஜூலை 16 அன்று, அடிஸ் அபாபா-வில் (Addis Ababa) இருந்து பாங்காக் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் விமானம் அழுத்தம் காரணமாகக் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
இதேபோன்ற மூன்றாவது சம்பவத்தில், ஜூலை 15 அன்று, ஹைட்ராலிக் கோளாறு காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
DGCA அதிகாரிகள் விளக்கம்
“சனிக்கிழமை இரண்டு வெளிநாட்டு விமான ஆபரேட்டர்கள் நிறுவனம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ஹைட்ராலிக் சிக்கல்கள் காரணமாகக் கொச்சினில் ஏர் அரேபியாவும், அழுத்தம் பிரச்சினை காரணமாகக் கொல்கத்தாவில் எத்தியோப்பின் விமானமும் தரையிறக்கப்பட்டது, வெள்ளியன்று, ஹைட்ராலிக் சிக்கல்கள் காரணமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்று DGCA அதிகாரிகள் கூறினார்.
இண்டிகோ
இதற்கிடையில், ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் பாகிஸ்தானின் கராச்சிக்கு அதிகாலையில் திருப்பி விடப்பட்டது. இது மற்றொரு இந்திய விமானம் நிறுவனம், சில நாடுகளுக்கு முன்பு தான் மதுரைக்குச் செல்ல வேண்டிய விமான நிறுவனம் தரையிறக்கப்பட்டது.
பாகிஸ்தான் காரச்சி
“ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 6E-1406, கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானி தொழில்நுட்பக் கோளாறைக் கண்டார். தேவையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, முன்னெச்சரிக்கையாக, விமானம் கராச்சிக்குத் திருப்பி விடப்பட்டது” என்று இண்டிகோ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
3 international airlines flights emergency landings in India in last 48 hours
3 international airlines flights emergency landings in India in last 48 hours 48 மணிநேரத்தில் 3 வெளிநாட்டு விமானங்கள் கோளாறு.. அவசர அவசரமாகத் தரையிறக்கும்..!