டெல்லி: நாடு முழுவதும் மத்திய பல்களை கழகங்களில் சேருவதற்க்காக CUET எனப்படும் பொது நுழைவு தேர்வு நடத்த படுகிறது. நீட் தேர்வுக்கு அடுத்தபடியாக நடத்தப்படும் நாட்டின் 2-வது பெரிய பொது நுழைவு தேர்வு இதுவாகும். 500 மையங்களில் சுமார் 8.30 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதுகிறார்கள். 12 வகுப்பு முடித்து கல்லூரி கனவுகளோடு மத்திய பல்களைகழக படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் ஒரு பிரிவினருக்கு நேத்து முன்தினம் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிவர்களின் பலருக்கு கடைசி நாள் வரை ஹால் டிக்கெட் வழங்கப்படாததால் தவித்து போகினர். சிரருக்கு நள்ளிரவில் மின்னஞ்சலில் ஹால் டிக்கெட் வழங்கப்பட விநோதமும் அரங்கேறியது. இந்த பததங்கல்ளோடு தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு திடீரென வேற மையம் ஒதுக்கப்பட்டுருந்ததை கண்டு கொளம்பு போனார்கள். புதிதாக ஒதுக்கப்பட்ட மையம் 60 km தூரம் வரை தள்ளி இருந்ததால் செரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் பலர் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்தனர். இது ஒரு முகம் இருக்க, டெல்லி அருகே ரோகினி என்ற பகுதியில் தேர்வு மையத்தை தேடி சென்றவர்களுக்கு அங்கு தேர்வு நடைபெறவில்லை என்று பதில் கிடைத்ததால் அதிர்ச்சியடைந்தனர். அவர்களும் வேறு இடம் நோக்கி உரிய நிறத்தில் செல்ல முடியாமல் வாய்ப்பை இழந்தனர். மத்திய பல்களைகழக நுழைவு தேர்வை எழுத முடியாமல் ஏமாற்றம் அடைந்தவர்கள் முறையான தகவல்ளோடு இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். CUET 2-ம் கட்ட தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் அப்பொழுது, தகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு அவர்கள் கத்து இருக்கின்றனர்.