Samsung Screen Replacement Program: சாம்சங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு பெரிய பரிசை அறிவித்துள்ளது. நீங்கள் சாம்சங் போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.
நிறுவனம் அதன் சில ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களை இலவசமாக மாற்றித் தருகிறது. சில நாள்களாக சாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளேக்கள் பிரச்சினைகளைச் சந்தித்தது. சாம்சங் கேலக்ஸி எஸ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போனில் செங்குத்து பச்சை கோடு தோன்றுவதாக பல பயனர்கள் புகார் கூறியுள்ளனர்.
லேப்டாப் வாங்கினால் ஓராண்டு இலவச டேட்டா – Jio உடன் கைகோர்த்த HP நிறுவனம்!
இதற்குப் பிறகு, நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது. தொடர்ந்து இந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளேக்களை மாற்றித் தருவதாக உறுதியளித்துள்ளது.
டிஸ்ப்ளே மாற்றும் திட்டத்தை தொடங்கிய சாம்சங்
கிடைத்த தகவல்களின்படி, சாம்சங் வியட்நாமில் கேலக்ஸி எஸ் 20 தொடருக்கான இலவச காட்சி மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், Samsung Galaxy S20, Galaxy S20 Ultra மற்றும் Galaxy S20 Plus ஸ்மார்ட்போன்களின் திரை இலவசமாக மாற்றப்படுகிறது.
Lockdown Mode: பூட்டை உடைத்தால் ரூ.16 கோடியாம்; ஆப்பிள் அறிவித்த அல்டிமேட் ஆஃபர்!
இந்தத் திட்டத்தின் கீழ் ஒருமுறை மட்டுமே மொபைல் திரை மாற்றப்படும். போன் வேறு வழியில் பழுதடைந்திருந்தாலோ, உத்தரவாத விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளை மீறினாலோ, இந்தத் திட்டம் பயனளிக்காது. இந்தத் திட்டத்தின் கீழ், திரைகளை ஆண்டின் இறுதி வரை (டிசம்பர் 31, 2022) நிறுவனம் மாற்றித்தரும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட திட்டம்
சாம்சங் அறிமுகப்படுத்திய S சீரிஸ் தான் நிறுவனத்தின் பிளாக்ஷிப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரீமியம் தொடரின் கீழ், 2020 ஆம் ஆண்டில், சாம்சங் கேலக்ஸி எஸ் 20 தொடரை இந்தியா உள்பட உலகளவில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
iPhone 13 Offers: ஐபோன் 13 மினி இப்போது அதிரடி தள்ளுபடி விலையில்; ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!
Samsung Galaxy S20, Samsung Galaxy S20+ மற்றும் Samsung Galaxy S20 Ultra ஸ்மார்ட்போன்கள் S20 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதிருந்து, இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் சிக்கல் ஏற்பட்டது.