பெய்ஜிங்: சீனாவில் வாழும் இஸ்லாமியர்கள், சீனாவின் பாரம்பரியத்தின் அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். சின்ஜியாங் பிராந்தியத்தில் சீன அரசு “இனப்படுகொலை” செய்வதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் சீன அதிபரின் சின்ஜியாங் பிராந்திய பயணமும், சீன பாரம்பரியத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நோக்கம் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது. வடமேற்கு சீனாவின் உரும்கியில் உள்ள ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் அருங்காட்சியகத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங், கிர்கிஸ்தான் மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
உலக நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்களைப் போல இல்லாமல், சீனாவின் கம்யூனிஸ்ட் சிந்தாந்தத்தின் அடிப்படையிலான சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டும் என்று சீன அதிபர் கூறுவதாக நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபரின் பயணம்: ஜோ பிடன் விடுத்த எச்சரிக்கை
ஒரு மில்லியன் உய்குர் முஸ்லிம்களும் இதர முஸ்லிம் சிறுபான்மையினரும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதியான ஜின்ஜியாங்கிற்கு 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் ஜின்பிங் சென்றுள்ளார். அதற்குப் பிறகு சீன அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றி வரும் சோசலிச சமுதாயத்திற்கு ஏற்ப நாட்டில் உள்ள மதங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அதிபர் ஜி ஜின்பிங், நாட்டில் சீனாவின் பாரம்படிய நோக்குநிலையில் முஸ்லிம்கள் வாழக வேண்டும் என்று கூறியுள்ளார்.
சீன தேசத்திற்கான வலுவான சமூக உணர்வை வளர்ப்பதை சின அரசு வலியுறுத்துகிறது, இதன் அடிப்படையில், மத விவகாரங்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தி, மதங்கள் ஆக்கப்பூர்வமான விதத்தில் வளர வேண்டும் என்பதன் அவசியத்தை ஜி ஜின்பிங் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மதங்களை நம்புபவர்களின் சாதாரண மதத் தேவைகள் கட்சி மற்றும் அரசாங்கத்தைச் சுற்றி நெருக்கமாக ஒன்றுபடுவதை உறுதிப்படுத்த மேம்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிபர் கூறியதாக சீன அரசின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஏலியன்களின் இருப்பை உறுதிப்படுத்துகிறதா ரேடியோ சிக்னல்
தாய்நாட்டுடனான அடையாளத்தை வலுப்படுத்த அனைத்து இன மக்களுக்கும் கல்வி கற்பதற்கும் வழிகாட்டுவதற்கும் அழைப்பு விடுத்த ஜி ஜின்பிங், கலாச்சார அடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஜின்ஜியாங் பிராந்தியத்தில் செயல்படும் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (The East Turkistan Islamic Movement (ETIM)) பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்லாமிய தீவிரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அதன் கொள்கைகள் உதவியுள்ளன என்று வலியுறுத்தும் சீனா, சின்ஜியாங்கில், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை “இனப்படுகொலை” என்று மேற்கத்திய நாடுகள் முத்திரை குத்துவது தவறு என்று தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
பெய்ஜிங்குடனான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் மிச்செல் பச்செலெட் சமீபத்தில் சின்ஜியாங்கிற்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார். அங்கு, சீனாவின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக மிச்செல் பல்வேறு கவலைகளை எழுப்பினார்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் அதிபராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க தயாராகிக் கொண்டிருக்கும் ஜி ஜின்பிங், பல தசாப்தங்களாக கம்யூனிஸ்ட் கட்சி தொடரும் அதிபரின் பதவிக்காலம் தொடர்பான முன்னுதாரணத்தை மாற்றியமைப்பார் என்று பரவலாக நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | இரான் அணுஆயுத ஒப்பந்தமும் ஜோ பிடனின் சூசக எச்சரிக்கையும்
மேலும் படிக்க | போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ