அதிநவீன டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்கள்: டெல்லி அரசு திட்டம்

டெல்லி: டெல்லியில் சிசிடிவி கேமரா உள்பட அதிநவீன வசதிகளுடன் கூடிய 1,397 டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்களை அமைக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 35 லட்சம் பயணிகள் பயனடையவுள்ள நிலையில் பேருந்துகள் எப்போது பேருந்து நிறுத்தத்திற்க்கு வரும், அதன் பயண நேரம், சேறும் இடம் உட்பட பல தகவல்களை டிஜிட்டல் திரையில் பயணிகள் அறியும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அவசர காலப் பொத்தான், சிசிடிவி கேமரா உட்பட பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டு கண்கானிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரத்யேக கண்கானிப்பு அறைகள் மூலம் பேருந்து நிறுத்தங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 453 வழித்தடங்களில் அமைக்கப்படவுள்ள நவீன பேருந்து நிறுத்தங்கள் மூலம் சுமார் 35 லட்சம் பயணிகள் பயனடைய உள்ளனர். தற்போது 7200 பேருந்துகள் டெல்லி போக்குவரத்து கழகத்தில் உள்ள நிலையில் 2024-ம் ஆண்டு இறுதிக்குள் அதன் எண்ணிக்கையை 11910 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.