சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து திருப்போரூர் அருகே உள்ள மருதேரி பகுதிக்கு நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
மருதேரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்து ஓட்டுனரும், நடந்துனரும் தூங்கினர். நள்ளிரவு 1.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர், இருவரையும் தாக்கி விட்டு டிக்கெட்டுடன் இருந்த பணப்பையையும், இருவரது செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை போன்றே, அதே பகுதியில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பூச்செடிகளை ஏற்றி வந்த லாரி டிரைவர் கிருஷ்ண மூர்த்தியை மர்ம நபர்கள் தாக்கி ரூ. 5 ஆயிரம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்து விட்டு லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
இந்த இரண்டு கொள்ளை சம்பவம் குறித்தும் திருப்போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.