அலியா பட்டின் தமிழ் பதிவு

மும்பை: இந்திப் படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்து, சில வருடங்களாக காதலை தொடர்ந்து வந்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலியா பட் இருவரும் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். தற்போது அலியா பட் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், மீண்டும் ரன்பீர் கபூர், அலியா பட் ஜோடி சேர்ந்துள்ள பான் இந்தியா படம், ‘பிரம்மாஸ்த்ரா முதல் பாகம்: சிவா’. அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படம் 3 பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வரும் செப்டம்பர் 9ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது. முக்கிய வேடங்களில் அமிதாப் பச்சன், நாகார்ஜூனா நடித்துள்ளனர். ஸ்டார் ஸ்டுடியோஸ், கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. பிரீத்தம் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் இடம்பெற்றுள்ள ‘தீத்திரியாய்’ என்ற பாடலை அலியா பட் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர், ‘எங்க காதலோட ஓசை இப்போ உங்களுக்கும் கேக்கும், தீத்திரியாய் மூலமா’ என்று தமிழில் பதிவிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.