இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் சற்று சரிவினைக் காணலாம் என ஆய்வு நிறுவனகளும் கணித்து வருகின்றன.
முன்னதாக நோமுரா நிறுவனம் 2023ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 5.4%ல் இருந்து, 4.7% ஆக குறைத்தது.
மார்கன் ஸ்டான்லி ஆய்வு நிறுவனமும் தனது பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்பினை ரெசசன் அச்சத்தின் மத்தியில் குறைத்துள்ளது.
அதானி எடுத்த அதிரடி முடிவு.. சாமானிய மக்கள் செம ஹேப்பி.. ஏன் தெரியுமா?
வளர்ச்சி கணிப்பு குறைவு
ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது முன்னதாக 2022 – 2023ம் நிதியாண்டில் 7.2% ஆக வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது. இது வளர்ச்சி காணலாம் என கூறியிருந்தாலும், முந்தைய கணிப்பினை காட்டிலும் மதிப்பீட்டினை குறைத்துள்ளது.
மெதுவான வளர்ச்சி
இது, பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பொருளாதாரம் மெதுவாக வேகத்தில் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவிலான பல முக்கிய பொருளாதாரங்கள் அழுத்தத்தில் காணப்படுகின்றன. இதற்கிடையில் தான் மார்கன் ஸ்டான்லி 40 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது.
அடுத்த நிதியாண்டில் என்ன வளர்ச்சி?
இந்த தரகு நிறுவனம் முன்னதாக 7.6% ஆக வளர்ச்சி காணலாம் என கணித்திருந்த நிலையில், தற்போது அதன் வளர்ச்சி விகிதத்தினை குறைத்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 6.4% ஆக வளர்ச்சி காணலாம் என்றும் மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்பினை மாற்றியமைத்துள்ளது.
பணவீக்கத்தினை கட்டுப்படுத்த நடவடிக்கை
சர்வதேச மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெசசன் வரலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் கூட கடந்த மாதம் வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியது.
டிசம்பர் காலாண்டில் குறையலாம்
வரவிருக்கும் டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 1.5% ஆக வளர்ச்சி குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 4.7% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் பல வருடங்களில் இல்லாதளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது ஜூன் மாதத்தில் 7.1% ஆகும். தரகு நிறுவனங்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்றே கணித்துள்ளனர்.
நாட்டில் தொடர்ந்து அதிகரித்துள்ள உணவு பொருட்கள் விலை, இன்று வரையில் அதிகரித்தே காணப்படுகின்றன. இது இப்போது இப்போதைக்கு குறையுமா என்பதும் பார்க்கப்படுகிறது.
Morgan Stanley cut India’s GDP growth forecast?
Morgan Stanley cut India’s GDP growth forecast?/இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறையலாம்.. எச்சரிக்கும் மார்கன் ஸ்டான்லி!