மான்செஸ்டரில் நடந்த ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த பட்லரின் விக்கெட்டை கேட்ச் பிடித்த ஜடேஜாவின் வீடியோ வைரலாகியுள்ளது.
ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
முதல் இரண்டு போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காத இங்கிலாந்து கேப்டன் பட்லர், நேற்றைய போட்டியில் அரைசதம் விளாசினார்.
அவர் நிலைத்து நின்று ஆடியிருந்தால் இங்கிலாந்து அணி 300 ஓட்டங்களை கடந்திருக்கும். ஆனால் அவரது ஆட்டத்திற்கு ரவீந்திர ஜடேஜா முடிவு கட்டினார்.
ஹர்திக் பாண்ட்யா ஓவரில் பட்லர் அடித்த ஷாட்டை ஜடேஜா மின்னல் வேகத்தில் சென்று கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்தார்.
ஜோஸ் பட்லர் 80 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்.
A fine catch from Jadeja removes Buttler.
Scorecard/clips: https://t.co/2efir2v7RD
#ENGvIND
pic.twitter.com/5zIQnQ8Nh4
— England Cricket (@englandcricket) July 17, 2022