“இனிமேல் நீ ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது..!" – வாக்குவாதம் செய்த கணவனை குத்திக் கொலைசெய்த மனைவி

ஜார்க்கண்ட் மாநிலத்தின். தன்பத் நகரத்துக்கு அருகே அமைந்திருக்க்கும் ஜோர்பிதா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா. சமீபத்தில்தான் புஷ்பாவுக்கு திருமணமாகி இந்த கிராமத்துக்கு வந்திருந்தார். திருமணத்துக்கு முன்பு வரை ஜீன்ஸ் உடைகளை விரும்பி அணிந்துவந்த புஷ்பா, திருமணமான பிறகும் வெளியிடங்களுக்குச் செல்லும்போது ஜீன்ஸ் பேண்ட் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். இது அவர் கணவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது.

ஜீன்ஸ் பேண்ட்

இந்த நிலையில், தங்களது கிராமத்தில் நடந்த விழாவுக்கு புஷ்பா ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு சென்றிருக்கிறார். பின்னர் வீட்டுக்கு வந்தவுடன், “ஏன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துகொண்டு திருவிழாவுக்குச் சென்றாய்?” என்று கேட்டு அவர் கணவர் புஷ்பாவிடம் சண்டையிட்டிருக்கிறார். இனிமேல் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்றும் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தில் புஷ்பா வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தன் கணவனைக் குத்தினார்.

கொலை

அதில் படுகாயமடைந்த புஷ்பாவின் கணவரை அவர் குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இது குறித்து இறந்தவரின் தந்தை கர்னேஷ்வர், “என் மகனுக்கும், மருமகளுக்கும் இடையே ஜீன்ஸ் பேண்ட் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் என் மகனை மருமகள் கத்தியால் குதித்திவிட்டார்” என்று தெரிவித்தார்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். குத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.