உக்ரைனிலிருந்து அகதியாக வந்த ஒரு பெண்ணுக்காக பத்து ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியைக் கைவிட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார் ஒரு பிரித்தானியர்.
Bradfordஐச் சேர்ந்த டோனி (Tony Garnett, 29) என்ற அந்த பிரித்தானியர், இப்போது உறவினர்களின் உதவியுடன் வாழத் தடுமாறிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சோபியா (Sofiia Karkadym, 22) என்ற உக்ரைன் நாட்டு இளம்பெண்ணுடன் வாடகை வீடு ஒன்றில் வாழ்ந்து வரும் Tony, சோபியாவுக்காக தன் மனைவியான லோர்னா (Lorna, 28)வையும் தன் இரண்டு பிள்ளைகளையும் கைவிட்டு விட்டார்.
முன்பு செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வந்தார் டோனி. அரசு மருத்துவமனை முதல் பல நிறுவனங்களுடன் பணி ஒபந்தங்கள் செய்திருந்தார் அவர்.
Credit: LNP
சோபியாவுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறிய விடயம் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பிரபலங்களை எல்லாம் வேலைக்கு வைத்துக்கொள்ளமுடியாது என அரசு மருத்துவ அமைப்பு கூறிவிட்டதாம்.
நல்ல வருமானம் பார்த்துக்கொண்டிருந்த டோனி, இப்போது சரியான வேலையில்லாமல், தான் தன் குடும்பத்தினர் அளிக்கும் சிறு சிறு உதவிகளுடன் காலம் தள்ளிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பணம் குறைவாக இருப்பதால் சோபியாவுடன் வாடகைக்கு வாழும் வீட்டுக்கு மேசை நாற்காலிகள் கூட வாங்க முடியவில்லையாம் டோனியால்.
இதற்கிடையில், சோபியா உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து பயணிக்கும்போது, கண்களில் கிருமித்தொற்று ஏற்பட்டு, அவரால் இப்போது சரியாக பார்க்க முடியாததால், அவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் டோனியின் தலை மீது விழுந்துள்ளதாம்!
Credit: Louis Wood