உலகின் மிக சிறந்த 10 ஹோட்டல்கள் எது.. எவ்வளவு கட்டணம் தெரியுமா

பொதுவாக சுற்றுலா செல்லும் போது பயணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஹோட்டல்கள் உள்ளன. இது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் ஒரு இடமாக உள்ளன.

ஹோட்டலின் ஆடம்பரம், உணவு, மதுபானம், கடற்கரை, ஸ்பா, நீச்சல் குளங்கள், டிரிப் அட்வைசர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தனி தனித் வில்லா வசதிகள், போக்குவரத்து வசதிகள் என பல்வேறு வசதிகளை வாரி வழங்குகின்றன.

அப்படி 2022ம் ஆண்டிற்கான சிறந்த 10 ஹோட்டல்கள் பட்டியலை பற்றி பார்க்கலாம்.

இலங்கை-யை காப்பாற்றும் இந்திய ரூபாய்.. RBI மாஸ்டர் பிளான்..! பலே சபாஷ்..!

சிறந்த 10 ஹோட்டல்கள்

சிறந்த 10 ஹோட்டல்கள்

இது குறித்து ட்ரிப் அட்வைசர் அறிக்கையில், வெளியிடப்பட்ட ஹோட்டல்கள் குறித்து பார்க்கலாம்

1.முதலிடம் பிடித்தது துலேமர் பங்களாக்கள் & வில்லாக்கள்: மானுவல் அன்டோனியோ, கோஸ்டா ரிகா

2.ஹோட்டல் கொலின் டி பிரான்ஸ்: கிராமடோ, பிரேசில்

3.ஐகோஸ் ஏரியா: கொஃபாலோஸ், கோஸ் தீவு, கிரீஸ்

4.ரொமான்ஸ் இஸ்தான்புல் ஹோட்டல் : இஸ்தான் புல், துருக்கி

5.ஓம்னியா: ஜெர்மாட், சுவிட்சர்லாந்து

6. கயகாபி பிரீமியம் குகைகள்: கப்படோசியா, உர்குப் துருக்கி

7.சிக்ஸ் சென்சஸ் லாமு: ஒலுவேலி தீவு

8.ஹமனாசி அட்வென்ச்சர் அண்ட்டைவ் ரிசார்ட்: ஹாப்கின்ஸ், பெலிஸ்

9.பத்மா ரிசார்ட் உபுட் : பயங்கன், இந்தோனேஷியா

10.BLESS ஹோட்டல் மாட்ரிட்: மாட்ரிட், ஸ்பெயின்

 துலேமர் பங்களாக்கள் & வில்லாக்கள்
 

துலேமர் பங்களாக்கள் & வில்லாக்கள்

உலகின் மிக பிரபலமான ஹோட்டலான இது 33 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இதில் தனித் தனி வில்லாக்கள், சொகுசு பங்களாக்கள், என பல ஆடம்பர அம்சங்கள் உள்ளன. இதனை சுற்றிலும் இயற்கையுடன் கலந்த வசதிகள், அழகான நடை பாதை, பீச் என பல தனித்துவமான வசதிகள் உண்டு. இதில் 4 நீச்சல் குளங்கள், 2 உணவகங்கள், பார், ஸ்பா, சுற்றுலா துறை என பல சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதில் துலேமர் பங்களாவில் 4 நபர் வரையில் ஒரு இரவுக்கு 250 டாலர்கள் எனவும், வில்லாக்களில் 4 நபர்கள் வரையில், 260 டாலர்களும், துலேமர் காசாஸ் 10 பேர் வரையில், ஒரு இரவுக்கு 665 டாலர்கள் எனவும், இதே துலேமர் தனியார் வீடுகளுக்கு ஒரு இரவுக்கு 9 பேர் வரையில் 545 டாலர்களும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

 ஹோட்டல் கொலின் டி பிரான்ஸ்

ஹோட்டல் கொலின் டி பிரான்ஸ்

பிரான்ஸில் உள்ள ஹோட்டல் கொலின் டி பிரான்ஸ் ஆடம்பரமான அறைகள், ஸ்பா, ஜிம் வசதி, ஆடம்பரமான உணவு, பார் என பல வசதிகளை கொண்டுள்ள இந்த ஹோட்டல், பழமை மாறாத கட்டமைப்புகளை கொண்ட சொகுதி வசதிகள் நிரம்பிய ஹோட்டலாகும். இதில் கட்டணமாக ஒரு இரவுக்கு சுமார் இந்திய மதிப்பில் 53,000 மேல் வசூலிக்கப்படுகின்றது.

ஐகோஸ் ஏரியா

ஐகோஸ் ஏரியா

பீச்-க்கு அருகில் இருக்கும் இந்த ஹோட்டல் ஆடம்பரமான அறைகள், ,மக்களுக்கு பிடித்தமான உணவுகள், நீச்சல் குளம், பார்,. ஜிம், கார்டன், போக்குவரத்து என பல வசதிகளை கொண்டுள்ளது. 5 ஸ்டார் வசதிகளை கொண்ட இந்த ஹோட்டலில் இருவர் தங்கம் ஒரு நாள் இரவுக்கு 280 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இதே மூன்று பேர் எனில் 320 பவுண்டுகளும், இதி ஜீனியர் ஜூட், டீலக்ஸ் ரூம்கள் இருவருக்கு ஒரு இரவுக்கு சுமார் 870 பவுண்டுகளும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

ரொமான்ஸ் இஸ்தான்புல் ஹோட்டல்

ரொமான்ஸ் இஸ்தான்புல் ஹோட்டல்

துருக்கியை சேர்ந்த ரொமான்ஸ் இஸ்தான்புல் ஹோட்டலில், பெயருக்கு ஏற்ப ரொமான்டிக் வசதிகளை கொண்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் விதமாக மிக ஆடம்பரமான வசதிகளை கொண்டுள்ளது.

இதின் கண்ணை கவரக் கூடிய நீச்சல் குளம், ஸ்பா, ஜிம் , பார், ஆடம்பர உணவகம் என பல வசதிகளை கொண்டுள்ளது.

இதில் கட்டணமாக சுமார் 21,000 ரூபாய் முதல் தொடங்குகிறது.

ஓம்னியா

ஓம்னியா

உலகத் தர,ம் வாய்ந்த சொகுசு வசதிகளை கொண்ட இந்த ஹோட்டல் மவுண்ட்டெயின் மீது அமைந்துள்ளது. பல ஆடம்பர தங்கும் அறைகள், இயற்கையான உணவுகள், நீச்சல் குளங்கள் என பல வசதிகளைக் கொண்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலை பகுதியில் அமைந்துள்ளது இதன் தனி சிறப்பு எனலாம்.

இதில் கட்டணம் சுமார் 50,000ல் இருந்து ஆரம்பிக்கிறது. வசதிகளுக்கு ஏற்ப இன்னும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

கயகாபி பிரீமியம் குகைகள்

கயகாபி பிரீமியம் குகைகள்

குகை போன்ற தோற்றத்தினை கொண்ட இந்த ஹோட்டலில் 5 ஸ்டால் ஹோட்டலையும் மிஞ்சும் வசதிகளை கொண்டுள்ளது. ஆடம்பர அறைகள், நீச்சல் குளங்கள், பார்கள், பல்வேறு நாட்டு உணவுகள், போக்குவரத்து வசதிகள், ஹனிமூனுக்கு என தனியான வசதிகள் என மக்கள் மனதை கொள்ளும் அளவுக்கு உள்ளன.

இதில் கட்டனம் சுமார் 12,000 ரூபாயில் தொடங்கி 3 லட்சம் ரூபாய் வரையில் உள்ளது. ‘

சிக்ஸ் சென்சஸ் லாமு

சிக்ஸ் சென்சஸ் லாமு

மாலத் தீவில் உள்ள சொகுசு ரிசார்ட்க்ளில் ஒன்று இது. மாலத் தீவு எனும்போது இதம் அழகை சொல்லவே வேண்டியதில்லை. அந்தளவுக்கு நம் வசதிகேற்பட பல அம்சங்கள் உள்ளன. ஆடம்பரமான தனி தனி தண்ணீரில் அமைந்துள்ள வில்லாக்கள், என பல வசதிகளை கொண்டுள்ளது.

இங்கு கட்டணமாக சுமார் 69,415 ரூபாயில் தொடங்கி 1,50,000 ரூபாய் வரையில் உள்ளது.

ஹமனாசி அட்வென்ச்சர் அண்ட்டைவ் ரிசார்ட்

ஹமனாசி அட்வென்ச்சர் அண்ட்டைவ் ரிசார்ட்

கண்ணை கவரும் ஆடம்பர சொகுசு ஹோட்டலான ஹமனாசி அட்வென்ச்சர் அண்ட்டைவ் ரிசார்ட், ஹனிமூனுக்கு ஏற்ற தளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. பீச் அருகில் அமைந்துள்ள இந்த ஹோட்டலில் பல உணவு வகைகள், பல வசதிகளை கொண்டுள்ளது.

பத்மா ரிசார்ட் உபுட்

பத்மா ரிசார்ட் உபுட்

இயற்கையுடன் இணைந்து எழில் கொஞ்சும் அழகில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரிசார்ட், உலகின் அத்தணை ஆடம்பர வசதிகளையும் கொண்டுள்ளது.

இங்கு கட்டனமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது தவிர பேக்கேஜ் கட்டணமாகவும் உள்ளது. இந்த பேக்கேஜ்கள் குறைந்தபட்சம் 1,35 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

BLESS ஹோட்டல் மாட்ரிட்

BLESS ஹோட்டல் மாட்ரிட்

5 ஸ்டார் ஹோட்டலான BLESS ஹோட்டல் மாட்ரிட், ஆடம்பரத்திற்கு பேர்போன ஹோட்டல்களில் ஒன்றாகும். இது உணவு, விளையாட்டு, தங்கும் அறைகள், பார்கள், ஸ்பா, ஜிம், பல பொழுதுபோக்கு அம்சங்கள் என பலவும் உள்ளன. இதிலும் கட்டணம் சுமர் 37,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

***மேற்கண்ட கட்டணங்கள் அனைத்துமே மாறக்கூடியது. ஏனெனில் கூடுதல் கட்டணங்கள், வரி சேர்க்கும்போது அதிகரிக்கலாம். அதோடு ஹோட்டல்களை பொறுத்தவரையில் சீசன் காலகங்களில் கட்டணம் அதிகரிக்கும். ஆக ஒவ்வொரு நாளும் மாறுபடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: top 10 டாப் 10

English summary

Top 10 hotels in the world for 2022: Trip advisor

Top 10 hotels in the world for 2022: Trip advisor/உலகின் மிக சிறந்த 10 ஹோட்டல்கள் எது.. எவ்வளவு கட்டணம் தெரியுமா/

Story first published: Monday, July 18, 2022, 14:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.