Top 10 private medical colleges in india: நீட் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இந்தியாவில் உள்ள டாப் 10 தனியார் மருத்துவ கல்லூரிகள் எவை? அவற்றில் தமிழகத்தில் இருந்து எத்தனை கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன? என்பதை இப்போது பார்ப்போம்.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு ஒட்டுமொத்தமாக எளிதாக இருந்ததாக கூறப்படும் நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாக இருக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதியதன் அடிப்படையில், தங்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும், நமக்கு எந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு என திட்டமிட தொடங்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: NEET UG 2022; நீட் தேர்வு கட் ஆஃப் சதவீதம் கணக்கிடுவது எப்படி? தகுதிகள் என்ன?
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள டாப் 10 தனியார் மருத்துவ கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இந்தப் பட்டியல் மத்திய கல்வி அமைச்சரால் வெளியிடப்பட்ட என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையை அடிப்படையாகக் கொண்டது.
டாப் 10 தனியார் மருத்துவ கல்லூரிகள்
முதல் இடத்தில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி (சி.எம்.சி) உள்ளது. இது 72.84 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்திலும் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி தான் இடம்பெற்றுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா விஷ்வா வித்யபீடம் 66.49 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் கர்நாடகாவின் மணிபாலில் உள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி உள்ளது. இது 63.89 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
நான்காம் இடத்தில் டெல்லியில் உள்ள இன்ஸ்டியூட் ஆஃப் லிவர் அண்ட் பைலேரி சயின்ஸ் உள்ளது. இது 58.79 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ஐந்தாம் இடத்தில் கர்நாடகாவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் மருத்துவ கல்லூரி உள்ளது. இது 58.49 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ஆறாம் இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா இன்ஸ்டியூட் ஆஃப் ஹையர் எஜூகேசன் அண்ட் ரிசர்ச் நிறுவனம் உள்ளது. இது 57.92 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ஏழாம் இடத்தில் மகாராஷ்டிராவில் உள்ள டாக்டர். டி.ஓய். பாட்டீல் வித்யாபீடம் உள்ளது. இது 57.41 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
எட்டாம் இடத்தில் ஒடிசாவில் உள்ள சிக்சா ஓ அனுசந்தன் நிறுவனம் உள்ளது. இது 57.21 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ஓன்பதாம் இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு கல்லூரியான சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி உள்ளது. இது 57.05 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
பத்தாம் இடத்தில் மகாராஷ்டிராவில் உள்ள தத்தா மாஹே இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் உள்ளது. இது 55.21 புள்ளிகளைப் பெற்றுள்ளது.