எரிபொருளுக்கு தேசிய ரீதியிலான “பாஸ்” வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் யாழ் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோக ஒழுங்கு முறை தொடர்பில் தேசிய ரீதியிலான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே எரிபொருள் அட்டை விநியோகத்தை நாம் ஆரம்பித்துவிட்டோம் .
இப்போது தேசிய ரீதியான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அதனை நாம் புறக்கணிக்க முடியாது.
யாழ் மாவட்டத்தில் எரிபொருள் அட்டை தொடர்ந்தும் வழங்கப்பட்டு, அதன் ஊடாக விநியோக ஒழுங்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
Logini Sakayaraja