புதுடில்லி: ஐ.சி.எஸ்.சி., எனப்படும் இந்திய இடைநிலை கல்வி சான்றிதழ், 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் நான்கு மாணவர்கள், 99.8 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தனர்.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் சார்பில் இந்திய இடைநிலை கல்வி சான்றிதழ் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.கவுன்சில் நடத்திய, 10ம் வகுப்புக்கானதேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் தேர்வுகள் முழுமையாக நடத்தப்படவில்லை.
அதனால், இந்த ஆண்டு இரண்டு பருவங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன.மொத்தம், 2,535 பள்ளிகளைச் சேர்ந்த, 2.31 லட்சம் மாணவர் இந்தத் தேர்வை எழுதினர். இதில் ஒட்டுமொத்தமாக, 99.97 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். நான்கு மாணவர்கள், 99.8 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
இரண்டாம் இடத்தை, 99.6 சதவீத மதிப்பெண் பெற்ற, 34 மாணவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். இதைத் தவிர, 72 மாணவர்கள், 99.4 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.புனேயைச் சேர்ந்த ஹர்கன் கவுன் மதாரு, கான்பூரைச் சேர்ந்த அனிகா குப்தா, பல்ராம்புரைச் சேர்ந்த புஷ்கர் திரிபாதி, லக்னோவைச் சேர்ந்த கனிஷ்கா மிட்டல் முதலிடத்தைப் பிடித்து உள்ளனர்.
தெற்கு மற்றும் மேற்கு மண்டலம், தலா, 99.9 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில் வடக்கு மண்டலம், 99.98 சதவீத தேர்ச்சிபெற்றுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement