ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் எவ்வாறு செயல்படனும்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோவ பாருங்க!

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் முன்னணி தொழிலதிபரான மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தான் பார்க்கும் சில அபரிதமான செயல்களை பாராட்டும் வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிடித்தமான விஷயங்களை பகிர்ந்த வண்ணம் இருப்பார்.

இது பலரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பதோடு, சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும்.

இதனாலேயே ஆனந்த் மஹிந்திராவை தொடருபவர்கள் மிக அதிகம் எனலாம்.

தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு.. 25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்..!

என்ன ட்வீட் அது?

என்ன ட்வீட் அது?

அப்படியாக இந்த முறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எப்படி வெற்றிகரமாக செயல்படனும் என்ற கேப்சனையும் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இது டீம் ஒர்க்குக்கான ஒரு சிறந்த பாடம். ஸ்டார்ட் அப் நிறுவனம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணம். வெற்றி என்பது ஒரு திசையில் இருந்து இடைவிடாமல் ஒன்றாக சேர்ந்து முன்னேறுவதாகும். வெற்றிக்கான அனைத்து பாதைகளிலும் முன்னேறி, தெளிவாக இருக்கும்போது சரியான பாதையில் முன்னேறி செல்ல வேண்டும் என கூறி, கால்பந்து விளையாடும் வீரர்களின் வீடியோ ஒன்றினையும் பதிவிட்டுள்ளார்.

புதிய கோணத்தில் அணுகுமுறை

புதிய கோணத்தில் அணுகுமுறை

ஸ்டார்ட் அப்களுக்கான இந்த பதிவில், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் மான்செஸ்டர் சிட்டிக்கு இடையேயான கால்பந்து போட்டிகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் வெற்றி என்பது ஒரு திசையில் இருந்து இடைவிடாமல் ஒன்றாக முன்னேறுவதில் இருந்து மட்டும் அல்ல, மாறாக புதிய புதிய அணுகுமுறைகளை, புதிய கோணங்களில் முயற்சி செய்வதால் வெற்றி பெறலாம் என்பதையும் காட்டுகின்றது.

பல ஆயிரம் பேர் லைக்
 

பல ஆயிரம் பேர் லைக்

ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவினை பல ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். பலரும் தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒரு பயனர் 44 பாஸ்களுக்கு பிறகு வீரர்கள் தங்களது இலக்கினை அடைந்தனர். இது அவர்களின் பொறுமையையும் நம்பிக்கையையும் காட்டுகின்றது.

சிறந்த ஒப்புமை

சிறந்த ஒப்புமை

இன்னொரு பயனர் இது நம்பிக்கையை வளர்ப்பதற்கான சிறந்த ஒப்புமை. இது குழுப்பணி மற்றும் புதிய யோசனைகளை வளர்ச்சிப்பதற்கு சிறந்த உதாராணம். நீங்கள் எப்போதும் உங்கள் வெற்றி இலக்கினை அடைய தீர்வில் உள்ள இடைவெளிகளை பார்க்கலாம்.

 புத்திசாலித்தனமான நகர்வுகள்

புத்திசாலித்தனமான நகர்வுகள்

இன்னும் சிலர் புத்திசாலித்தனமான நகர்வுகள், பொறுமை, காத்திருப்பு, அதை தொடர்ந்து இலக்கை அடைவதற்காக அழகான வாய்ப்பு என காட்டியுள்ளது. இது ஸ்டார்ட் அப் மட்டும் அல்ல, எந்தவொரு வணிகத்திற்கும் இந்த நடவடிக்கை தேவை. மஹிந்திரா டெலிவரி லைனுக்கான சிறந்த உதவியாக கூட இருக்கலாம் என பதிவிட்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Anand Mahindra has posted a video on how to start-up company work

Anand Mahindra has posted a video on how to start-up company work/ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் எவ்வாறு செயல்படனும்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோவ பாருங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.