கனடாவில் வாழும் தமிழ்ப்பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான வன்புணர்வு கொலைமிரட்டல்கள்… வீடு திரும்ப அச்சம்: பின்னணி


கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணான லீனா மணிமேகலை, தனக்கு ஆயிரக்கணக்கான வன்புணர்வு கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

கனடாவில் வாழ்ந்து வரும், யார்க் பல்கலை மாணவியும் சுயாதீன திரைப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, தன உருவாக்கியுள்ள, காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

அந்த போஸ்டரில், காளி வேடத்தில் இருக்கும் லீனா, கையில் சிகரெட்டுடன் இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்துக்கடவுள்களை அவர் இழிவுபடுத்திவிட்டதாக கடும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், அந்த போஸ்டர் வெளியான இரண்டே வாரங்களில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் கொலை, வன்புணர்வு உட்பட ஆயிரக்கணக்கான மிரட்டல்கள் வந்துள்ளதாக லீனா தெரிவித்துள்ளார்.

அதனால், இந்தியாவிலுள்ள தன் வீட்டுக்குத் திரும்ப தான் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார் லீனா.

ஆனாலும், இந்த அனுபவம் கலையை உருவாக்குவதிலிருந்து தன்னைத் தடுக்காது என்று கூறும் லீனா, நான் நம்பும் திரைப்படங்களை உருவாக்காவிட்டால் நான் இறந்துவிடுவேன் என்கிறார்.
 

கனடாவில் வாழும் தமிழ்ப்பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான வன்புணர்வு கொலைமிரட்டல்கள்... வீடு திரும்ப அச்சம்: பின்னணி | Leena Manimekalai Kaali Film Poster Hindu Right

credit – cbc



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.