மறு பிரேத பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவு
பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும்-நீதிபதி
மறுபிரேத பரிசோதனையின்போது தந்தை உடனிருக்க அனுமதி
இறுதிச்சடங்கு அமைதியாக நடைபெற நீதிபதி அறிவுறுத்தல்
மற்றவர்களின் உயிர் பாதுகாப்பு முக்கியம் – நீதிபதி
வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை – மாணவி தந்தை
கலவரக்காரர்கள் குறித்து புலன் விசாரணை தேவை – நீதிபதி
மாணவி மரண வழக்கு விசாரணை ஜூலை 29க்கு தள்ளிவைப்பு
மாணவி பெற்றோர் மீது இரக்கம் கொள்கிறேன் – நீதிபதி
சமூகத்தின் மீதும் வக்கீல்களுக்கு பொறுப்பு உள்ளது – நீதிபதி
“தமிழகம் அமைதி பூங்கா என்ற நம்பிக்கை புரட்டிப்போடப்பட்டுள்ளது”
மறுபிரேத பரிசோதனை – உயர்நீதிமன்றம் அமைத்த குழு விவரம்
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை
நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி முதல் வழக்காக விசாரிக்க கோரிக்கை
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் – நீதிபதி சதீஷ்குமார் கேள்வி
போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? இறப்புக்கு காரணம் என்ன? – நீதிபதி கேள்வி
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது – நீதிபதி
வெளிநாட்டில் இருந்த தந்தை 14ம் தேதி தான் வந்தார், வன்முறையில் பெற்றோருக்கு தொடர்பு இல்லை – மனுதாரர் தரப்பு
வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை சிறப்புப்படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும் – நீதிபதி
4500 மாணவர்களின் நிலை என்ன, சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன, திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை – நீதிபதி
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் – நீதிபதி
சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மனுதாரர்கள் வேறென்ன கேட்கிறார்கள் என தெரியவில்லை – அரசுத் தரப்பு
திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல, திட்டமிட்ட சம்பவம் – நீதிபதி சதீஷ்குமார்
போலீசார் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை, சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை – நீதிபதி
மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும், தகுதியில்லாத மருத்துவர்கள் கொண்டு நடத்தப்பட்டது – மனுதாரர்
தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம், நீங்கள் நிபுணரா என நீதிபதி கேள்வி
வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில், மறுபரிசோதனை நடத்த வேண்டும் – நீதிபதி
மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு, பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் – நீதிபதி
மாணவியின் தந்தை தனது வக்கீலுடன், மறுபிரேத பரிசோதனையின் போது இருக்க அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச்சடங்கு அமைதியான முறையில் நடைபெற வேண்டும் – நீதிபதி அறிவுறுத்தல்
வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு விட்டதால் காவல்துறை வேலை முடிந்ததாக நினைக்க வேண்டாம் – நீதிபதி
மற்றவர்களின் உயிரை இக்காட்டான நிலைக்கு போலீசார் தள்ளிவிட்டுவிடக் கூடாது – நீதிபதி
வன்முறைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மாணவியின் தந்தை மீண்டும் விளக்கம்
கலவரத்துக்கு யார் காரணம் என்பதை புலன் விசாரணை செய்ய வேண்டும் – நீதிபதி சதீஷ்குமார்
மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன – தந்தை இராமலிங்கம்
எய்ம்ஸ் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்து, அதில் மாணவி மரணத்தில் சந்தேகம் இல்லை என்றால், வன்முறை மூலம் ஏற்பட்ட பாதிப்பு மீண்டுவிடுமா? – நீதிபதி
தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் அந்த நம்பிக்கையை புரட்டி போட்டுள்ளீர்கள் – நீதிபதி சதீஷ்குமார்
பேட்டி கொடுக்க கூடாதென மனுதாரருக்கு அறிவுறுத்துங்கள்;
சமூகத்தின் மீதும் வக்கீல்களுக்கு பொறுப்பு உள்ளது; இது உத்தரவு அல்ல – நீதிபதி கருத்து
மாணவி உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்வதற்கான மருத்துவர்கள் குழுவை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
விழுப்புரம் அரசு மருத்துவமனை டாக்டர்.கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்.ஜூலியான ஜெயந்தி உள்ளிட்டோர் குழுவில் இடம்
சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்.கோகுலநாதன், தடயவியல் துறை ஓய்வு பெற்ற நிபுணர் சாந்தகுமாரி ஆகியோர் மருத்துவர்கள் குழுவில் இடம்