பெலகாவி : பட்டமளிப்பு விழாவில், பல்வேறு துறைகளின் சாதனையாளர்களுக்கு, ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்க, ராணி சென்னம்மா பல்கலைக்கழகம், விண்ணப்பம் கோரியுள்ளது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.பெலகாவியின், ராணி சென்னம்மா பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடக்கும் போது, வெவ்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களை, அடையாளம் கண்டு, ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்குவது வழக்கம்.
அதேபோன்று பத்தாவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. இதில் கவுரவ டாக்டர் பட்டம் பெற, சாதனையாளர்களிடம் விண்ணப்பம் கோரியுள்ளது. இது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.பொதுவாக பல்கலைக்கழகங்கள் சார்பில் அமைக்கப்படும் கமிட்டிகளின் சிபாரிசு அடிப்படையில், துணை வேந்தர், கவர்னரின் உத்தரவுப்படி, பல்வேறு துறைகளின் சாதனையாளர்கள் பெயர்களை முடிவு செய்வது வழக்கம்.
ஆனால், டாக்டர் பட்டத்துக்கு, சாதனையாளர்களிடம் விண்ணப்பம் கோரியது சரியல்ல என கல்வி வல்லுனர்கள், பிரமுகர்கள் கருத்து தெரிவித்துஉள்ளனர்.பல்கலைக்கழக பேராசிரியர் ராமசந்திர கவுடா கூறுகையில், ”பல துறைகளில் சாதனை செய்தவர்களை, அடையாளம் கண்டு அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும். ”இதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த பட்டியலை, வல்லுனர் கமிட்டியிடம் தாக்கல் செய்த பின், பெயர்களை அவர்கள் முடிவு செய்வர்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement