கண்ணூர்: கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. துபாயில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கடந்த 12ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில் இரண்டாவது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. துபாயில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது.அவரது உமிழ்நீர், ரத்த மாதிரிகள் பூனாவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. பின்னர் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் நோய் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு 40 வயதான நபர் கேரளா வந்துள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் லேசான கொப்பளங்கள் இருந்ததை தொடர்ந்து அவருக்கு குரங்கு அம்மை நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.இதையடுத்து அவரது உமிழ் நீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் முதல் பாதிப்பு குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில் இரண்டாவது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், கன்னூரைச் சேர்ந்த 31 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட நபர் தற்போது பரியாரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளார். குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில் இரண்டாவது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.