Second monkeypox case confirmed in Kerala: Health Minister Veena George: கேரளாவில் திங்கள்கிழமை இரண்டாவது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஜூலை 13 அன்று துபாயில் இருந்து கண்ணூர் வந்தடைந்த 31 வயது நபருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கண்ணூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.
இதையும் படியுங்கள்: விமானத்தில் பயணிக்க தடை; இண்டிகோவை சாடிய கேரள கம்யூனிஸ்ட் தலைவர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய 35 வயது நபர் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, ஜூலை 14 அன்று கேரளாவில் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு பதிவானது. பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மாநில அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை கேரளாவிற்கு அனுப்பியது. 14 மாவட்டங்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது மற்றும் நான்கு விமான நிலையங்களில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் ஜூனோடிக் நோயாகும், இது பெரியம்மை போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது, இருப்பினும் குறைவான மருத்துவ தீவிரம் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இது பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் அறிகுறிகளுடன் ஒரு சுய-வரம்பிற்குட்பட்ட நோயாகும். சமீபத்திய காலங்களில், பாதிப்பு இறப்பு விகிதம் சுமார் மூன்று முதல் ஆறு சதவிகிதம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்பு ஆகியவற்றின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது, மேலும் காயங்கள், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் மற்றும் படுக்கை போன்ற அசுத்தமான பொருட்களிலிருந்து பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, தசைவலி மற்றும் முதுகுவலி, வீங்கிய நிணநீர் கணுக்கள், குளிர், சோர்வு மற்றும் முகத்தில் பருக்கள் அல்லது கொப்புளங்கள், வாய் மற்றும் உடலின் பிற பாகங்களில் தோன்றும் தடிப்புகள் ஆகியவை அறிகுறிகளாக இருக்கலாம்.
பெரும்பாலான குரங்கு அம்மை பாதிப்புகளில் ஐரோப்பிய பிராந்தியத்தில் (86 சதவீதம்) மற்றும் அமெரிக்காவில் (11 சதவீதம்) பதிவாகியுள்ளன. இந்த நோய் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளான கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, காபோன், லைபீரியா, நைஜீரியா மற்றும் சியரா லியோன் போன்ற நாடுகளில் பரவுகிறது. 2003 இல் அமெரிக்காவிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டது., அப்போது 47 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சாத்தியமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.