வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கான இழப்பீட்டு தொகையை, காலம் கடத்தாமல் விரைவாக அளிக்குமாறு, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:கொரோனா தொற்றால் உயிரிழந்தோர்
குடும்பத்தினருக்கான இழப்பீட்டு தொகையை அளிப்பதில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இனியும் காலம் கடத்தக் கூடாது. தகுதி பெற்ற அனைவருக்கும் இழப்பீட்டு தொகை சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும். இழப்பீட்டு தொகை கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் குறை தீர்ப்பு கமிட்டியை அணுகலாம். இவர்களின் மனு மீது, நான்கு வார காலத்திற்குள் குறை தீர்ப்பு கமிட்டி முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே, ஆந்திராவில் மாநில பேரிடர் மீட்பு படையின் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை, வேறு கணக்குகளுக்கு மாற்றி, அதை ஆந்திர அரசு செலவிட்டு வருவதாக, பல்லா ஸ்ரீனிவாச ராவ் என்பவர் தாக்கல் செய்த மனு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில பேரிடர் மீட்பு படையின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட தொகையை, இரண்டு நாட்களுக்குள் அந்த கணக்கில் மீண்டும் செலுத்த, ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement