டாக்கா : வங்கதேசத்தில் சமூக வலைதளத்தில் வெளியான பதிவால் ஆத்திரம் அடைந்த சில முஸ்லிம் இளைஞர்கள், வீடுகள் மற்றும் ஹிந்து கோவிலில் தாக்குதல் நடத்தினர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நரைல் மாவட்டம் சஹபரா என்ற கிராமத்தில் வசித்த ஒரு இளைஞர், சமூக வலைதளத்தில் மத உணர்வை துாண்டும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டார்.
இதைப் பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், அந்தக் கிராமத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். மேலும், ஹிந்து கோவிலுக்குள்ளும் புகுந்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறைக் கும்பலை கலைத்தனர். அங்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர் தலைமறைவாகி விட்டதால், அவரது தந்தையிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
டாக்கா : வங்கதேசத்தில் சமூக வலைதளத்தில் வெளியான பதிவால் ஆத்திரம் அடைந்த சில முஸ்லிம் இளைஞர்கள், வீடுகள் மற்றும் ஹிந்து கோவிலில் தாக்குதல் நடத்தினர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்