சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் | Dinamalar

சபரிமலை : சபரிமலையில் ஆடி மாத பூஜை நேற்று அதிகாலை தொடங்கியது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. அன்று வேறு பூஜைகள் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் நடத்தி நெய் அபிேஷகத்தை தொடங்கி வைத்தார். பின்னர் வழக்கமான கணபதிேஹாமம், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிேஷகம், அத்தாழ பூஜையுடன் சிறப்பு பூஜைகளாக உதயாஸ்தமனபூஜை, படிபூஜை நடைபெற்றது.நேற்று அதிகாலை நடை திறந்த போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஜூலை 21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.