சாமானியர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.. இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் சற்று சரிவில் காணப்பட்ட நிலையில் இந்த வாரத்திலும் தொடரலாமோ? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்றே பெரும் ஏமாற்றம் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.

தற்போது ஏற்றம் கண்டிருந்தாலும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

செம சான்ஸ்.. 11 மாத சரிவில் தங்கம் விலை.. வாங்கலாமா வேண்டாமா.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

குறிப்பாக கடந்த வார இறுதியில் தங்கம் விலையானது சரிவில் முடிவடைந்ததையடுத்து, இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் பணவீக்க விகிதம் எதிர்பார்த்ததை போல மீண்டும் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் உச்சம் தொட்டுள்ளது. இது மீண்டும் மத்திய வங்கியினை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.

 குறைந்த விலை வாங்க தூண்டியிருக்கலாம்

குறைந்த விலை வாங்க தூண்டியிருக்கலாம்

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் 1.32% சரிவினைக் கண்டுள்ளது. குறைந்த விலையில் வாங்கி லாபம் பார்க்க மீடியம் டெர்ம் முதலீட்டாளர்களை தூண்டியிருக்கலாம். எனினும் தங்கம் விலையானது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாகவே வர்த்தகமாகி வருகின்றது. ஆக தற்போது அதிகரித்து இருந்தாலும், விலை மீண்டும் குறைய வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

 20 வருட உச்சத்தில் டாலர்
 

20 வருட உச்சத்தில் டாலர்

தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இது டாலரில் தங்கத்தினை வாங்குவோருக்கு தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இன்னும் வட்டி அதிகரிக்கும்போது இன்னும் டாலரின் மதிப்பு இன்னும் உச்சம் தொடலாம். இது மேற்கோண்டு தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம்.

நிபுணர்கள் கணிப்பு

நிபுணர்கள் கணிப்பு

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது இன்று அதிகரித்திருந்தாலும், மீண்டும் குறைய வாய்ப்புகள் அதிகம். வரவிருக்கும் மானிட்டரி பாலிசி கூட்டத்தில் வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலை குறைய வழிவகுக்கலாம்.

ரெசசன் அச்சம்

ரெசசன் அச்சம்

சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது உச்சம் தொட்டு வரும் நிலையில், ரெசசனுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். எனினும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் டாலரின் மதிப்பு, பத்திர சந்தை என இரண்டும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

சீனாவில் புதியதாக கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும்.எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளியின் தேவையும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். ஆக இதுவும் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

 சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?

சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 9.25 டாலர்கள் அதிகரித்து, 1712.85 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதேபோல வெள்ளி விலையும் சற்று அதிகரித்து, 18.742 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே இன்னும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 245 ரூபாய் அதிகரித்து, 50,325 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 382 ரூபாய் அதிகரித்து, 55,950 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை என இரண்டுமே குறைந்த விலையில் முதலீட்டாளர்களை வாங்க தூண்டியிருக்கலாம்.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 4626 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,008 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை.இது கிராமுக்கு 5047 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,376 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,470 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 62.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 625 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 62,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று – ரூ.46,260

மும்பை – ரூ.46,190

டெல்லி – ரூ.46,190

பெங்களூர் – 46,290

கோயமுத்தூர், மதுரை, என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,260

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 18th June 2022: What is the gold price today?

gold price on 18th june 2022: What is the gold price today?/சாமானியர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.. இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

Story first published: Monday, July 18, 2022, 12:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.