புதுடெல்லி: சர்வதேச அளவில் பிரபலமானபெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், உள்ளூர் டிஜிட்டல் மற்றும் பாரம்பரிய செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களின் விளம்பர வருவாயில் நியாயமான பங்கை செலுத்தும் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நீண்டநாளாக ஆலோசிக்கப்பட்ட விஷயம் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அசல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள், அதன் பயனை சொற்பமாக பெறும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கங்கள் மூலம் பெரும் லாபத்தை ஈட்டுகின்றன
இது தொடர்பாக, இந்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும். பெரிய தொழில்நுட்ப சிலிக்கான் வேலி நிறுவனங்களான கூகுள் (யூடியூப்), மெட்டா (ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உரிமையாளர்), ட்விட்டர் மற்றும் அமேசான் ஆகியவை உள்ளூர் இந்திய வெளியீட்டாளர்களுக்கும் டிஜிட்டல் வெளியீட்டாளர்களுக்கும் பணம் செலுத்தும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களின் அசல் உள்ளடக்கத்திற்கான வருவாயில் ஒரு பங்கு கிடைக்கும் என்ற நிலைமை உருவாவது இந்திய பாரம்பரிய செய்தி வெளியீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும்.
மேலும் படிக்க | Xiaomi-ன் சூப்பரான பேட்டரி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR