சோமேட்டோ ஊழியரின் மனித நேயம்.. 1 வயது குழந்தைக்காக எடுத்த ரிஸ்க்.. குவியும் பாராட்டுகள்!

சமீப காலமாக சோமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் செய்யும் நெகிழ வைக்கும் பல சம்பவங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பார்க்க முடிகின்றது.

அந்த வகையில் உடல் நிலை சரியில்லாத குழந்தைக்கு கனமழையையும் பொருட்படுத்தாமல், 12 கிலோ மீட்டர் சென்று, மருந்து வாங்க உதவி செய்த டெலிவரி மேனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பொதுவாக கொட்டும் மழையில் யாராக இருந்தாலும் வீட்டினுள் முடங்கவே நினைப்பார்கள். ஆனால் இது போன்ற மழைகாலங்களிலும் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவன ஊழியர்கள் பணிபுரிவதை காண முடிகின்றது.

ஐடி ஊழியர்களே உஷாரா இருங்க.. டிசிஎஸ், அக்சென்சர், ஹெச்சிஎல் திடீர் முடிவு..!

இரவு நேர உணவு ஆர்டர்

இரவு நேர உணவு ஆர்டர்

கேரளாவை சேர்ந்த சோமேட்டோ டெலிவரி ஊழியரான ஜிதின் விஜயன், இரவு நேர ஆர்டர்களில் ஒன்றை டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது உடல் நிலை சரியில்லாத ஒரு வயது குழந்தையுடன் இருக்கும் பெண்ணுக்கான ஆர்டர் அது என அறிந்து கொண்ட ஜிதின், அந்த குழந்தைக்காக மழையும் பொருட்படுத்தாமல் 12 கிலோமீட்டர் சென்று மருந்துகள் வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.

மனித நேயத்தை பாராட்டுகிறோம்

மனித நேயத்தை பாராட்டுகிறோம்

ஜிதினின் இந்த செயலை பாராட்டி சோமேட்டோ விருதையும் கொடுத்துள்ளது, சோமேட்டோவின் செயல்பாடுகளில் எங்களது டெலிவரி பார்ட்னர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்கள் தங்கள் பணியையும் தாண்டி , மனித நேயத்துடன் செயல்படுகின்றனர். இதனை சோமேட்டோ அங்கீகரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. இதற்காக ஜிதின் விஜயனுக்கு Zomato Gallantry விருதும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

யார் யாருக்கு விருது?
 

யார் யாருக்கு விருது?

இந்த கேலண்டரி அவார்டினை ஜிதின் தவிர, சிவாஜி பாலாஜிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சோமேட்டோவின் 14வது பிறந்த நாளின் போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இதே 14 லக்கி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக உணவும் வழங்கப்பட்டுள்ளது.

 கடும் வெயிலிலும் உதவி

கடும் வெயிலிலும் உதவி

தங்களது பணிச் சுமையை காட்டிலும் இதுபோன்ற மனிதாபிமான செயல்கள், மற்றவர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர், தனது உணவு டெலிவரியினை தனது இருசக்கர வாகனத்தில் டெலிவரி செய்ய செல்வதும், சோமேட்டோ டெலிவரி மேன் தனது சைக்கிளில் டெலிவரி செய்ய செல்வதையும் பார்க்க முடிகிறது. ஸ்விக்கி டெலிவரி மேன், சோமேட்டோ டெலிவரி பேக்கினை வைத்திருப்பவரை தனது கையில் பிடித்துக் கொண்டு வேகமாக கூட்டி செல்வதை பார்க்க முடிகிறது. இவர்களின் ஆழமான நட்பினை இந்த கடும் வெயிலிலும் பார்க்க முடிகிறது என சமூக வலைதள பயனர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: zomato சோமேட்டோ

English summary

Award to zomato employee who traveled 12 km in pouring rain to buy medicine for 1 year old child

Award to zomato employee who traveled 12 km in pouring rain to buy medicine for 1 year old child/சோமேட்டோ ஊழியரின் மனித நேயம்.. 1 வயது குழந்தைக்காக எடுத்த ரிஸ்க்.. குவியும் பாராட்டுகள்!

Story first published: Monday, July 18, 2022, 16:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.