வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் ரகசிய ஓட்டெடுப்பு என்பதால், உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்ற தன்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) நடைபெறுகிறது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில், திரிணமுல் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் ஓட்டுப்பதிவில் எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் ஓட்டளித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா நிருபர்களிடம் கூறுகையில், ‛இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. அனைத்து வாக்காளர்களும் தங்கள் மனசாட்சியின் குரலுக்கு செவிசாய்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு ரகசிய ஓட்டெடுப்பு என்பதால், அவர்கள் தங்கள் விருப்பத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்ற என்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன். நான் அரசியல் போராட்டத்தை மட்டும் நடத்தவில்லை, அரசு ஏஜென்சிகளுக்கு எதிராகவும் போராடுகிறேன். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாகிவிட்டனர். கட்சிகளை உடைத்து மக்களை தங்களுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர். இதில் பணமும் விளையாடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement