டெல்லி: டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நடைபெற உள்ளது. மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அந்த விசாரணை நிலுவையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த விவகாரத்தை காவிரி ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 17 மற்றும் 23ம் தேதிகளிலும் ஜூலை 6ம் தேதி நடைபெற இருந்த கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் வெள்ளியன்று நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை குறித்து காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதிக்க கூடாது என தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேகதாது பற்றி காவிரி ஆணைய கூட்டத்த்தில் விவாதிக்க கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் நிலையில் ஆணையம் கூடுகிறது. மேகதாது வழக்கு விசாரணைக்கு நாளை மறுநாள் வரவுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார்.