சென்னை: தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் தமிழிலேயே பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்நாளே எதிர்க்கட்சிகளின் கடும் அமளியில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டது. இடையிடையே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்படி, மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் தமிழில் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகள், ஏடிஎம்களில் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் செயல்படும் அனைத்து வங்கி கிளைகளிலும் தமிழில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றிலும் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் வங்கி கிளைகளில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றும்போது தமிழ் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி கிளைகளில் உள்ள படிவங்கள் தமிழிலும் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.