தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு.. ஏன் தெரியுமா..?!

சண்டிகரில் இரண்டு நாள் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தச் சந்திப்பின் போது பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியும் திருத்தப்பட்டது. இதன் வாயிலாக ஜூலை 18 முதல் அதாவது இன்று முதல் ஒரு சில பொருட்களின் விலை உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோக்கள், உட்படப் பிற பொருட்கள் மற்றும் சேவை மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் மீதான இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜூலை 18ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அரசி விலை அதிகரிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் எவ்வாறு செயல்படனும்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோவ பாருங்க!

தமிழ்நாடு

தமிழ்நாடு

பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளுக்கு 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கும் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவால், தமிழகத்தில் அரிசியின் விலை இன்று முதல் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர வாய்ப்புள்ளது.

அரிசி விலை

அரிசி விலை

தமிழ்நாடு அரிசி ஆலைகள் சங்கம் மற்றும் வணிகர்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 18 முதல் அரிசி, மக்காச்சோளம் மற்றும் பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களை 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு
 

தமிழக அரசு

உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டு உள்ள ஜிஎஸ்டி வரிகளைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அரிசி வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை சங்கம் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

கடையடைப்பு

கடையடைப்பு

 

சுமார் 3000 அரிசி ஆலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான அரிசி வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சனிக்கிழமை கடையடைப்பு செய்தனர்.

மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின்

அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி வியாபாரிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு அளித்தனர், இந்த மனுவில் மாநில அரசுக்கான உரிமையை உணர்த்தும் வகையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஜிஎஸ்டி பரிந்துரைகள் மாநில அரசுக்குக் கட்டுப்படாது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

வரித் தளர்வுகள்

வரித் தளர்வுகள்

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் எம்.சிவானந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சில் 2017ல் பதிவு செய்யப்பட்ட அரிசி பிராண்டுகளுக்கு வரி விதித்திருந்தது. ஆனால், பதிவு செய்யப்படாத பிராண்டுகளுக்கு விலக்கு அளித்துள்ளது. தற்போது இந்தத் தளர்வுகள் நீக்கப்பட்டு அரிசி பிராண்டுகளுக்கு இனி 5 சதவீத ஜிஎஸ்டி என்ற முறையைக் கொண்டு வந்துள்ளது.

சில்லறை முறை

சில்லறை முறை

சில்லறை முறையில் அரிசி (Loose rice) ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் வராது என்றாலும், அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்கள் FSSAI சட்டத்தின் கீழ் பேக் செய்யப்பட்ட வடிவில் விற்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து கடைக்காரர்களுக்கும் மாநில உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rice will become costlier in Tamilnadu from today after GST changes

Rice will become costlier in Tamilnadu from today after GST changes தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு.. ஏன் தெரியுமா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.