பெங்களூரு : ‘உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா கூறிய கருத்துகளை, நான் ஆமோதிக்கிறேன்’ என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து, ‘டுவிட்டரில்’ அவர் நேற்று கூறியிருப்பதாவது:மதிப்புக்குரிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, எதிர்க்கட்சிகள், விசாரணை கைதிகள் குறித்து, சில முக்கியமான கருத்துகளை கூறியுள்ளார். இதை நானும் ஆமோதிக்கிறேன். நீதிபதியை பாராட்டுகிறேன்.நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், தலைமை நீதிபதி எச்சரித்து கூறியவற்றை அனைவரும் கேட்டே ஆக வேண்டும். ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான், நாட்டுக்கே சிறப்பு.குற்ற வழக்கில் கைதானவர்களை, விசாரணையே இல்லாமல், நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பதும், ஒரு தண்டனை தான். அவசரமாக, விவேகமின்றி கைது செய்யப்படுவது, ஜாமின் பெறுவதில் ஏற்படும் சிக்கல் பற்றியும், தலைமை நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார். இவரது பேச்சுகள், அரசுகளின் கண்களை திறக்கட்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement