துரோகிகளுக்கு இடமில்லை… பால்ய நண்பரை தண்டித்த உக்ரைன் ஜனாதிபதி


உக்ரைனின் சட்டத்தரணி ஜெனரல் மற்றும் சக்திவாய்ந்த பாதுகாப்பு சேவையின் தலைவரை பதவி நீக்கம் செய்து நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பால்ய நண்பரும் நாட்டின் பாதுகாப்பு சேவையின் தலைவருமான Ivan Bakanov,
மற்றும் ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரித்து வந்த முதன்மை சட்டத்தரணி Iryna Venediktova ஆகியோரின் பதவிகளை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பறித்துள்ளார்.

இந்த விவகார தொடர்பில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், ரஷ்யாவுடன் ஒத்துழைக்கும் முதன்மை உக்ரைன் முகமைகளின் உறுப்பினர்கள் தொடர்பில் பல வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன எனவும்,
இதன்பொருட்டு உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ததாக கூறியுள்ளார்.

துரோகிகளுக்கு இடமில்லை... பால்ய நண்பரை  தண்டித்த உக்ரைன் ஜனாதிபதி | Zelenskyy Fires Childhood Friend

மேலும், சட்டத்தரணிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக 651 தேசத்துரோகம் மற்றும் எதிரி நாட்டுடன் ஒத்துழைப்பு உள்ளிட்ட வழக்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மட்டுமின்றி, பகானோவ் மற்றும் வெனிடிக்டோவாவின் முகமைகளில் இருந்து 60 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் பணியாற்றி வருவதாக ஜெலென்ஸ்கி அம்பலப்படுத்தியுள்ளார்.

அவர்கள் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுவது உறுதி எனவும் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் அறிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.